பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 20). இவர் டி.கோட்டாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் தள்ளுவண்டியில் துரித உணவு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு வந்த 2 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்ததாக தெரிகிறது. இதை தட்டி கேட்டபோது அவர்கள், அந்த தள்ளுவண்டியில் இருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தகராறில் ஈடுபட்டது, மகாலிங்கபுரத்தை சேர்ந்த தொழிலாளி அருண்குமார் (30), டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த கண்ணன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.