சீவல் திருடி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

சீவல் திருடி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2022-10-07 18:45 GMT

மயிலாடுதுறையில் தனியார் கம்பெனியில் சீவல் திருடி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீவல் கம்பெனி

மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத்தெருவில் கருணாகரன் (வயது 51) என்பவருக்கு சொந்தமாக சீவல் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் மயிலாடுதுறை திருவிழந்தூர் மேலவீதியை சேர்ந்த முத்துக்குமாரசாமி மகன் ஜனகர் (43), குத்தாலம் தாலுகா வழுவூர் தோப்பு தெருவை சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (41) ஆகியோர் பணியாற்றி வந்தனர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு சீவல் விற்பனை மந்தமாகியுள்ளது. மேலும் கம்பெனியிலிருந்து சீவலும் மாயமாகியுள்ளது.

2 பேர் கைது

இதுகுறித்து கருணாகரன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜனகரும், மாரியம்மாளும் சேர்ந்து கம்பெனியில் தினமும் சீவலை திருடி சென்று, கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து மாரியம்மாள் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சீவல் மற்றும் தனியார் கம்பெனி பெயரிட்ட கவர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் பறிமுதல் செய்ததுடன் ஜனகர், மாரியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்