சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
சீர்காழி அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்;
திருவெண்காடு:
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலைவாசல் சுனாமி நகர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி பொன்மலர் (வயது39) என்பவர் தனது வீட்டின் அருகில் புதுச்சேரி சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பொன்மலரை கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்ற திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் ராஜ்குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.