மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-14 19:31 GMT

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் காங்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் காங்குழி காலனி தெருவை சேர்ந்த பரஞ்சோதி(வயது 65), காமராஜர் நகரை சேர்ந்த புனித வள்ளி(48) ஆகியோர் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அழகாபுரம் கிராமத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீசாரை கண்டதும், அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பாசிக்குளம் பகுதியை சேர்ந்த கலாமணி(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்