புகையிலை பொருட்கள் விற்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புகையிலை பொருட்கள் விற்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2023-06-23 19:26 GMT

திருச்சி தில்லைநகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற வழக்கில் ஜெயராமன் (வயது 33) என்பவர் தில்லைநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோல் போலிபத்திரம் தயாரித்த வழக்கில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பஞ்சாபிகேஷன் (39) என்பவரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்