சாராய ஊறல் போட்டவர் உள்பட 2 பேர் கைது

சாராய ஊறல் போட்டவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-06 18:30 GMT

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப்பட்டி கடைவீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து சாராய பாக்கெட் விற்ற கொட்டாரக்குன்றை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் தயாரிக்க 60 லிட்டர் ஊறல் போட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தங்கராசுவையும் போலீசார் கைது செய்தனர். சாராய ஊறலை அதே இடத்தில் கீழே ஊற்றி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்