கொத்தனார் உள்பட 2 பேர் மாயம்
விழுப்புரம் அருகே கொத்தனார் உள்பட 2 பேர் மாயம் போலீசார் விசாரணை
செஞ்சி
விழுப்புரம் அருகே உள்ள கஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 44). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து ஜெயபாலின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் வல்லம் கிராமத்தை சேர்ந்த மணவாளன் என்கிற துரைசாமி(63). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் இது குறித்து அவரது மகன் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.