37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-03 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல ரவுடி

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மதில்தாணி விளையை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 31). இவர் மீது மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை போலீஸ் நிலையங்களில் 30 குற்ற வழக்குகளும், 7 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. இவரை 2 முறை போலீசார் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சுனில்குமார் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார். அதை தனது நண்பர் ஒருவருடன் மது விருந்து வைத்து கொண்டாடியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுனில்குமார், அந்த நண்பரை கல்லை தூக்கி போட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தப்பியோடி விட்டார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சுனில்குமாரை மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து கைது செய்தார்.

மற்றொரு வாலிபரும்...

இதேபோல், மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் மற்றொரு சுனில்குமார் (34). குடும்ப பிரச்சினை காரணமாக நடந்த மோதலில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரை சுனில்குமார் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சுனில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மார்த்தாண்டம் தனிப்படை போலீசார் இலவுவிளை பகுதியில் வைத்து சுனில்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்