கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்ற நைஜீரிய வாலிபர் உள்பட 2 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்ற நைஜீரிய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-21 07:08 GMT

குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி தலைமையில் தீவிரமாக கண்காணித்த போது நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் குன்றத்தூர் பகுதியில் அடிக்கடி போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூருவில் இருந்து சென்னை வந்த நைஜீரிய நாட்டு வாலிபர் ஆரோன் பெல் (வயது 30), என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு உரிய வேலை இல்லாததால் மனைவியின் சம்பளத்தில் பெங்களூருவில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

மேலும் சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பெங்களூருவில் இருந்து கொக்கைனை (போதை பொருள்) மொத்தமாக வாங்கி வந்து குன்றத்தூர் அருகே தங்கி இருக்கும் சாமுவேல் என்பவரிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை சாமுவேல் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர் சாமுவேலையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்