கொத்தனார் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-12-26 20:12 GMT

வெவ்வேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கொத்தனார்

லால்குடியை அடுத்த கீழ அன்பில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 46). இவரும் அதே பகுதியை சேர்ந்த போஸ் என்ற சிவகுமார் (44) என்பவரும் கொத்தனார் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சசிக்குமார் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் பலி

திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்