வெவ்வேறு விபத்து:முதியவர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-09-18 18:45 GMT

ராமா்


திட்டக்குடி, 

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 74). இவர் நேற்று இரவு திட்டக்குடி- தொழுதூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று, ராமர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே டிரைவர் சரக்கு வாகனத்தை அங்கையே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி

நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் மனோகர் (55), கீரை வியாபாரியான இவர் நேற்று காலை, தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மனோகர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்