விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-30 18:57 GMT

திருமயம் அருகே உள்ள மேலூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவர் தனது உறவினரான சோலை அம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் மணவாளங்கரை சென்று விட்டு மீண்டும் மேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலை கடந்த போது எதிர்பாராத விதமாக திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் கணேசன், சோலை அம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்