வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-28 18:45 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி குடித்தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம்(வயது 61). விவசாய கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பஸ் நிலையம் அருகே கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருவதற்கு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த கோபி என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நீலமேகத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி உப்பிலிபட்டியை சேர்ந்த அண்ணாவி மனைவி வெள்ளையம்மாள். இவர் உப்பிலிபட்டி சாலையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது சத்தியமங்கலம் வைபுத்தூரை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வெள்ளையம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெள்ளையம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்