விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

அரவக்குறிச்சி அருகே வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-03-13 18:50 GMT

பெண் பலி

அரவக்குறிச்சி அருகே உள்ள மார்க்கம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தருண்குமார் (வயது 21). இவர் நேற்று மதியம் இனுங்கனூருக்கு சென்றிருந்த தனது தாய் தமிழ்ச்செல்வியை (50) மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு மார்க்கம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வந்தபோது, அந்த வழியாக மார்க்கம்பட்டியில் இருந்து அரவக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் தருண்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தருண்குமார் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்த தருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ் மோதி ஒருவர் சாவு

கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று ெசன்று கொண்டிருந்தது. அந்த பஸ் அரவக்குறிச்சி மேட்டுப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்