நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் உள்பட 2 பேர் பலி

பொள்ளாச்சியில் நடந்த விபத்துகளில் நகராட்சி ஒப்பந்்த தூய்மை பணியாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2023-02-22 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நடந்த விபத்துகளில் நகராட்சி ஒப்பந்்த தூய்மை பணியாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

தூய்மை பணியாளர்

பொள்ளாச்சி மரப்பேட்டை விதியை சேர்ந்தவர் பொன்னான். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 45), இவர் பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். மகேஸ்வரி நேற்று பொள்ளாச்சி-உடுமலை சாலையில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். மரப்பேட்டை ரவுண்டானா அருகே சென்றபோது, வேகமாக வந்த சரக்கு வேன் ஸ்கூட்டரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சரக்கு வேன் டிரைவர் கேரளாவை சேர்ந்த அப்துல் முபாரக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

மற்றொரு விபத்தில், பனைமரத்துபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44), கூலி தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கெடிமேட்டில் இருந்து கோலார்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்த வந்த தனியார் பஸ் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்