பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி

பால் வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2023-08-31 20:06 GMT

வையம்பட்டி:

பால் வியாபாரி

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 55). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மொபட்டில் வையம்பட்டி அணுகு சாலை அருகே சென்றபோது சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மொபட் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பலி

புதுக்கோட்டை ஆவூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(29). இவருடைய மனைவி நந்தினி (22). நேற்று முன்தினம் காலை குமரேசன் தனது மோட்டார் சைக்கிளில் ஆவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். கொட்டப்பட்டு அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென எந்த வித சிக்னலும் இன்றி வலதுபுறம் திரும்பியதாக தெரிகிறது. இதை குமரேசன் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்