வெவ்வேறு சம்பவத்தில் கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவத்தில் கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு சம்பவத்தில் வடமாநில வாலிபர் இறந்தார்.

Update: 2023-07-28 20:23 GMT

வெவ்வேறு சம்பவத்தில் கூலி தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு சம்பவத்தில் வடமாநில வாலிபர் இறந்தார்.

கூலி தொழிலாளி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரகுபதி (வயது 26).கூலி தொழிலாளியான இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் ரகுபதி தந்தையிடம் குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் இல்லை என கூறிவிட்டார். இதனால் மனம் உடைந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலாளி தற்கொலை

திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (80). காவலாளியான இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமாநில வாலிபர் சாவு

பீகார் மாநிலம் பாலுகனி அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் பரன் புலியன். இவரது மகன் அலோக்கு குமார் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதனால் வேலைக்கு போகாமல் நிறுவனத்தின் அறையில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அங்கு வேலை பார்த்து வந்த தினேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்