பூ வியாபாரி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது

பூ வியாபாரி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-15 20:57 GMT

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அதே ஊரைச் சேர்ந்த வளவன் பிரபு என்பவருடன் கச்சைகட்டி டாஸ்மாக் கடை அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வளவன் பிரபு வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், வளவன் பிரபு ஆகியோரை அந்த 3 பேரும் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டபேதார்சந்தையை சேர்ந்த சந்துரு (21), தாதகவுண்டன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (21), ஆகாஷ் (20) ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்