வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
விவசாயி
பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமனி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 60). விவசாயி. இவரும் மற்றொரு விவசாயியான செல்வ குமார் (44) என்பவரும் வயலுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சிறுகமணி புற்று மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மேலும் செல்வகுமார் லேசான காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
இதேபோல் முசிறி அருகே உள்ள ஆமூர் மணப்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் சிவானந்தம். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி சென்று விட்டு மீண்டும் முசிறி செல்வதற்காக கம்பரசம்பேட்டை வந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த கனரக வாகனம் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சிவானந்தத்தை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்