கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2023-07-08 19:57 GMT

முக்கூடல்:

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கல்லூரி மாணவர்-தொழிலாளி

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவில் பாப்பாக்குடி அருகே உள்ள இடைகால் விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.அந்த வழியாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த மைக்கேல் வினித் (19) என்ற கல்லூரி மாணவர் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

2 பேர் பலி

இடைகால் விலக்குக்கு மேற்கே உள்ள சர்ச் அருகில் வந்த போது, 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மைக்கேல் வினித் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மைக்கேல் வினித்தை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் வினித் பரிதாபமாக பலியானார்.

பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்