பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஒரு தனியார் கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு நின்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (வயது 29), தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ராம்குமார் (20) என்பது தெரியவந்தது. கஞ்சா பழக்கம் மூலம் ராம்குமாருக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பழனியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். இதைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.