சிறுவன் உள்பட 2 பேர் கைது

கூலிப்படையை ஏவி விவசாயியை கொல்ல முயன்ற வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-25 19:00 GMT

எட்டயபுரம்:

கூலிப்படையை ஏவி விவசாயியை கொல்ல முயன்ற வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயி

விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அழகு சுந்தரபாண்டி (வயது 32). இவரும் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த புனித ஆனி எப்சிபா (29) என்பவரும் 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.

புனித ஆனி எப்சிபாவுக்கும், மாரிராஜ் (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து காதல் கணவரை தீர்த்துக்கட்ட புனித ஆனி எப்சிபா, மாரிராஜ் மூலம் கூலிப்படையை ஏவினார். இதற்காக சுமார் ரூ.5 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

கொல்ல முயற்சி

கடந்த 5-ந் தேதி கூலிப்படையினர் அழகு சுந்தரபாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புனித ஆனி எப்சிபா, மாரிராஜ், அவர்களுக்கு உதவியாக இருந்த கவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

மேலும் 2 பேர் கைது

இந்த நிலையில் நாகலாபுரம் பஜார் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அஜித் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்