முயல் வேட்டையாட முயன்ற 2 பேருக்கு அபராதம்

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.;

Update: 2023-01-18 18:45 GMT

கடையம்:

கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆயிரப்பேரி பீட் பகுதியில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி, வனவர் முருகேசன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வேட்டை நாய்களை வைத்து முயல்களை வேட்டையாட முயன்ற தங்கராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவரையும் பிடித்தனர். இதுதொடர்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய நாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்