கஞ்சா விற்ற 2 பேருக்கு அபராதம்

நெல்லையில் கஞ்சா விற்ற 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-02-01 18:51 GMT

நெல்லையை அடுத்த பேட்டையில் கடந்த ஆண்டு கஞ்சா விற்றதாக பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த கனகவேல் (வயது 67), ரகுமான்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ஜாபர் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கஞ்சா விற்ற கனகவேலுக்கு ரூ.1,000-ம், அப்துல் ஜாபருக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர்கள் 2 பேருக்கும் 3 ஆண்டுகளுக்கான நன்னடத்தை பிணை ஆணை உத்தரவு பிறப்பித்தும் உத்தரவிட்டார். கனகவேல், அப்துல் ஜாபர் ஆகிய 2 பேரும் 3 ஆண்டுகளுக்குள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் நன்னடத்தை பிணை ஆணையை மீறியதாக கருதி 2 பேருக்கும் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்