வெவ்ேவறு விபத்துகளில் 2 பேர் சாவு
மதுரை அருகே நடந்த வெவ்ேவறு விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
திருமங்கலம்.
சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 30). மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர். சங்கர் திருமங்கலம் அருகே மேல உரப்பனூரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் தனது நண்பர்கள் சிவகுமார் மற்றும் சிவன்ராஜ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் அருகே செங்குளம் விலக்கிலிருந்து நான்கு வழி சாலையை கடந்தனர். அப்போது மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் காயமடைந்தனர். இதில் சங்கர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சிவக்குமார் மற்றும் சிவன்ராஜ் இருவரும் காயத்துடன் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலூர் அருகே ஆட்டுக்குளம் உலகநாதபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (47).இவர் மொபட்டில் மேலூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். சிவகங்கை ரோட்டில் ஆட்டுக்குளம் விலக்கில் திரும்பும்போது அவ்வழியே வேகமாக வந்த மினி வேன் ஒன்று மொபட் மீது மோதியதில் பரமசிவம் இறந்தார்.. இந்த விபத்து குறித்து வேனை ஓட்டி வந்த வேடசந்தூரை சேர்ந்த கார்த்திக்குமார் (31) என்பவர் மீது மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.