வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
காரியாபட்டி,
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
டிராக்டர் மீது மோதியது
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவர் ஆவியூர் அருகே ஒரு தனியார் கம்பெனி பின்புறம் உள்ள தனது விவசாய தோட்டத்தில் தனக்கு சொந்தமான டிராக்டரை வைத்து உழவு செய்து விட்டு வீட்டிற்கு டிராக்டரை எடுத்து சென்றார்.
அப்போது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கம்பெனி அருகே மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, கிருஷ்ணன் ஓட்டி சென்ற டிராக்டர் மீது மோதியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான கிருஷ்ணனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சாத்தூர் தாலுகா சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் வீரபாண்டியன் (53). இவரது மனைவி மகேஸ்வரி (47). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கோவில்பட்டி சாத்தூர் நான்கு வழி சாலையில் உப்பத்தூர் விலக்கு அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வந்தபோது வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறிய போது நிலை தடுமாறியது. இதில் பலத்த காயம் அடைந்த மகேஸ்வரி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் சீதாலட்சுமி (25) கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.