வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-10-13 21:08 GMT


மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

முதியவர் பலி

சமயநல்லூரில் திண்டுக்கல்-திருமங்கலம் தேசிய நான்கு வழி சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார். வெள்ளை சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.இது சம்பந்தமாக சமயநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கார் மோதி மற்றொருவர் சாவு

திருமங்கலம் தாலுகா மதிப்பனூர் குழிப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனம் ஒன்றில் தனது ஊரிலிருந்து விருதுநகர் மாவட்டம் அயன்கரிசகுளத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பேரையூர்-சிலைமலைப்பட்டி சாலையில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று, பால்பாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பால்பாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பேரையூர் போலீசார், கார் ஓட்டி வந்த வன்னிவேலாம்பட்டியை சேர்ந்த ராமர் (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்