மதுபோதையில் குளத்துக்குள் விழுந்த 2 பேர் பலி

லால்குடி அருகே மதுபோதையில் குளத்துக்குள் விழுந்த 2 பேர் பலியானார்கள்

Update: 2022-12-26 19:37 GMT

லால்குடி அருகே மதுபோதையில் குளத்துக்குள் விழுந்த 2 பேர் பலியானார்கள்

மது அருந்தினர்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கீழவாளாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53). இவரும் லால்குடி எல்.அபிஷேகபுரம் மேல தெருவை சேர்ந்த சேகர் (62) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வாளாடி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் அமர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மதுபோதையில் இருந்த இருவரும் குளத்துக்குள் விழுந்தனர். இதை யாரும் கவனிக்காததால் குளத்தில் உள்ள தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். நேற்று திருநாவுக்கரசு, சேகர் ஆகியோரது உடல்கள் குளத்தில் மிதந்தன.

உடல்கள் மீட்பு

இதை கண்ட அப்பகுதி மக்கள் லால்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் குளத்துக்குள் விழுந்து 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்