மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் சாவு

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2023-08-01 07:56 GMT

சோமங்கலம், 

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 23). விக்னேஷ் (17), விஜய் (17). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் படப்பை அடுத்த சோமங்கலத்தில் இருந்து கிஷ்கிந்தா சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை வளைவுப் பகுதியில் செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் பள்ளத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

2 பேர் பலி

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் மற்றும் விஜய் ஆகியோர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்னேஷ் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்