வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
துறையூர் வட்டம், உப்பிலியபுரத்தை சேர்ந்த செல்வராஜின் மகள் காயத்ரி(29). இவருக்கும் நங்கவரம் குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஜெயஸ்ரீ (5) என்ற மகள் இருக்கிறாள். தற்போது இவர்கள் முசிறி நடராஜர் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் காயத்திரி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று எலிப்பசையை(விஷம்) தின்று மயங்கி கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 38). கொத்தனாரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த நடராஜன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.