2 பேர் தற்கொலை

திருச்சுழி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-07-11 21:01 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வாலிபர் தற்கொலை

திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 33). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆதலால் இவர் தனது தாயார் நாகரத்தினம் என்பவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் முத்துப்பாண்டி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாகரத்தினம் கடைக்கு சென்றார். அப்போது முத்துப்பாண்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்று விட்டு நாகரத்தினம் வீட்டிற்கு திரும்ப வரும் போது வீடு பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது முத்துப்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், முத்துப்பாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்துஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல நரிக்குடி அருகே உள்ள புலியாண்டார்கோட்டையை சேர்ந்தவர் பஞ்சாண்டி (52). கூலி தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷத்தை குடித்தார். உடனே அவருைடய மனைவி பஞ்சாண்டியை நரிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பஞ்சாண்டி இறந்தார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்