பொள்ளாச்சி
கோவை அருகே உள்ள சூளுரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). லாரி டிரைவர். இவர் பொள்ளாச்சி விஜயபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் செல்போனை திருடி சென்றனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தப்பிஓடிய 2 பேரையும் விரட்டி சென்று பிடித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த முருகேசன் (40), சிவா (21) என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகார் பேரின் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.