ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்
ஆலங்குளம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்.
ஆலங்குளம் அருகே கல்லூத்து பகுதியில் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக ஒரு காரில் 19 மூடைகளில் 760 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் காசியாபுரத்தை சேர்ந்த செந்தூர் பாண்டி (வயது 42), மருதன்கிணறை சேர்ந்த டிரைவர் உடையார் (43) ஆகிய இருவரும் கைது செய்தனர். அவர்களிடம் வந்து ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.