ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்
உடன்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தெற்கு மாநாடை சேர்ந்த பெருமாள் மகன் இசக்கிதுரை (வயது 29), தெற்கு மாநாடு வேல்பாண்டியன் மகன் கணேசன் (34) ஆகியோர் ஆன்லைன் மூலம் நம்பர்களை வைத்து லாட்டரிகளை விற்று கொண்டிருந்தனர். அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து, அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,130-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்தனர்.