ராஜபாளையம்,
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பகுதியில் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சிவக்குமார் (வயது 36), சரத்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வடக்கு போலீசார் கைது செய்தனர்.