கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் எல்.எப்.ரோடு, அரசமரம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பொது கழிப்பிட வளாகம் முன்பு சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். விசாரணையில் அவர், கூடலூர் கரிமேட்டுப் பட்டியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசாார் விசாரணை நடத்தினர். அதில், மூனுசாமி கோவில் தெருவை சேர்ந்த மல்லிகா (47) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்ய கொடுத்ததாக அவர் கூறினார். பின்னர் மல்லிகாவையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.