துப்பாக்கி, கத்தியுடன் 2 பேர் கைது

திருப்பரங்குன்றம் அருகே துப்பாக்கி, கத்தியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-10 20:17 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ஆதிசிவன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் சுற்றித்திரிந்தனர். அதைக்கண்ட போலீசார் அவர்களை நெருங்கினர். அவர்கள் தப்பித்து ஓட முயன்றதாக தெரிகிறது. இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணையை முடுக்கிவிட்டனர். அதில் திருநகர் மொட்டமலை சீனிவாச காலனியை சேர்ந்த முனிஸ் (24), திருநகர் ஜோசப் நகரை சேர்ந்த அருண் (32) என்று தெரியவந்தது. இவர்கள் வழிப்பறி மற்றும் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் முனிஸ், அருண் ஆகிய 2 பேரிடம் இருந்து கத்தி, துப்பாக்கி மற்றும் 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்