2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2022-10-26 20:01 GMT

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரகாரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நடராஜன் மகன் சூரி என்ற சூர்யா (வயது 24). கும்பகோணம் அடுத்த மாத்தூர் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் ராஜரத்தினம் (36), இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் (திருவையாறு), ரேகாராணி (நாச்சியார்கோவில்) ஆகியோர் குண்டர் சட்டத்தில் சூர்யா, ராஜரத்தினம் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்