குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (வயது 22), கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (24). இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் இவர்கள் இருவரின் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் முருகேஷ் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.