நிதி மோசடி வழக்கில் 2 பேர் கைது
நிதி மோசடி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அந்த தொகையை இரட்டிப்பாக தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. தென் மாவட்டங்களில் இந்த நிறுவனம் மற்றும் இதன் கிளைகளில் நடந்த மோசடி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சிலரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சைமன் ராஜா, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கபில் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.