கிராம பெண் உதவியாளரிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது

Update: 2023-07-24 20:03 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் புதுப்பேட்டை செல்லமுத்து தெருவை சேர்ந்த பாபு மனைவி சங்கீதா (வயது 43). பணி முடிந்து வீடு திரும்பும் போது சங்கீதாவிடம் 2 பேர் நகையை பறிக்க முயன்றனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம பெண் உதவியாளரிடம் நகையை பறிக்க முயன்றதாக அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்