மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-17 19:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள்புதூரை அடுத்த சின்னபுதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 30). நேற்று முன்தினம் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள ஓட்டல் முன்பு தனது நண்பருடன் சாப்பிட வந்தார். அந்த நேரம் அவரது மோட்டார்சைக்கிளையும், நண்பரின் ஸ்கூட்டரையும் ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்தனர். அந்த மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டரை 2 பேர் திருட முயன்றனர். இதை பார்த்த மாதேஸ்வரன் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கிருஷ்ணகிரி பூவத்தியை சேர்ந்த முத்துராஜ் (22) மற்றும் 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்