மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-14 16:55 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் தழுதாழையை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடை வீதிக்கு சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளை 2 பேர் பூட்டை உடைத்து திருடிச்செல்ல முயன்றனர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் எசனை கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(வயது 25), சக்திவேல்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்