ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்த முயன்ற 2 பேர் கைது

ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-30 18:18 GMT

செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட கிராம மக்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் டிரைவரை மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அரியலூர் மாவட்ட குடிமை பொருள் புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து குடிமைப் பொருள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதில் 4 டன் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி அதனை நாமக்கல் கோழிப்பண்ணைக்கு லாரியில் கடத்த முயன்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரேம்குமார் (39), அரிசி ஆலை உரிமையாளர் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், 4 டன் அரிசி மாவு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்