அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 41). இவர் நேற்று முன்தினம் குறிச்சி சந்திப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த பெருமாள்புரம் இலந்தைகுளத்தை சேர்ந்த பச்சைகிளி (37), டவுன் தடிவீரன்கோவில் மேற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் (26) ஆகியோர் ராகவனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதுகுறித்து ராகவன் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சைகிளி, கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.