பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவர் சம்பவத்தன்று முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காடு விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஆறுமுகத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது, ஆறுமுகம் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமார் உள்பட 2 பேரை கைது செய்தார்.