திண்டுக்கல்லில் பன்றிகள் திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல்லில் பன்றிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-31 20:45 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே கோர்ட்டு காலனியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 36). இவர் பன்றிகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி அவரது தொழுவில் அடைத்து வைத்திருந்த 2 பன்றிகள் திருடுபோனது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் முனியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜம்புளியம்பட்டி பிரிவு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கிரி (20), அருண்குமார் (23) என்பதும், முனியப்பனின் பன்றிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்