கடை உரிமையாளரிடம் பணம் - செல்போன் திருடிய 2 பேர் கைது
பாளையங்கோட்டையில் கடை உரிமையாளரிடம் பணம் - செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தில் பெருமாள்புரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 29). ஷாப்பிங் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தூத்துக்குடியை சேர்ந்த ஆனந்த் (25) மற்றும் ஆறுமுகநேரியை சேர்ந்த பட்டுராஜன் (41) ஆகியோர் சென்று பொருட்களை வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.8ஆயிரத்து 400 பணத்தையும் திருடிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்த், பட்டுராஜன் ஆகியோரை கைது செய்தனர்.