நகை- வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

சீர்காழி அருகே பல்வேறு வீடுகளில் நகை- வெள்ளி பொருட்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-10-15 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே பல்வேறு வீடுகளில் நகை- வெள்ளி பொருட்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருட்டு

சீர்காழி அருகே சேந்தங்குடி, பாதரக்குடி, கீழதென்பாதி, சட்டநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்களை மா்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சீர்காழி அருகே உள்ள தாண்டவன்குளத்தைச் சேர்ந்த மருது என்ற விஜயபாஸ்கர்(வயது28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள தெம்மூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன்( 32) ஆகிய இருவரும் சேர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

மேலும் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று தற்பொழுது இருவரும் வெளியே வந்து சீர்காழி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றி திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் நகை- வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.இதைத்தொடா்ந்து விஜயபாஸ்கர், மணிமாறன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வேறு ஏதும் திருட்டில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்