இரும்பு சீட்டுகளை திருடிய 2 பேர் கைது

வைத்தீஸ்வரன் கோவில் அருகேஇரும்பு சீட்டுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-02 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கதிராமங்கலம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே ஆலவெளி கூத்தூர் பெரிய தெருவை சேர்ந்த செல்வம் மகன் செல்வகுமார் (வயது 21), இதேபோல் மயிலாடுதுறை காளிங்கராயன் ஓடை வடக்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சக்தி கௌதம்(22) ஆகிய இருவரும் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு இரும்பு சீட்டுகள் 4 இரும்பு ஆங்கில் உள்ளிட்டவைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு இன்ஸ்பெக்டர் முத்து பாலகிருஷ்ணன் ஆகியோர் இரும்பு சீட்டுகளை திருடிய செல்வகுமார், சக்தி கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்